india

img

தடுப்பூசி அனைவருக்கும் செல்லும் வரையிலும் முன்னெச்சரிக்கை அவசியம்..... கோவிட்-19 தொற்றுப் பரவல் குறித்து சிபிஎம் கருத்து....

புதுதில்லி:
உலக அளவில் பத்து கோடிக்கும்மேற்பட்டோர் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டிருக் கிறார்கள். இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டோர் அமெரிக்காவில் (2.5 கோடி பேர்) என்பதும் அதற்கு அடுத்ததாகஇந்தியாவும் பிரேசிலும் இருந்துவரு வதும் நீடிக்கிறது. இதுவரை, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலக அளவில் இறந்திருக்கிறார்கள்.

இந்தியாவில், ஜனவரி 25 தேதிவாக்கில், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் என உறுதியாகத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே ஆறுலட்சம் பேர்களாகும். இவர்களில், இப்போதும் இந்நோய்க்கு ஆளாகியிருப்போர் எண்ணிக்கை என்பது சுமார் 2,15,000 ஆகும். மொத்தத்தில் இறந்தோர் எண்ணிக்கை 1.5 லட்சத்திற்கும் அதிகமாகும்.இப்போது இந்த வைரஸ் மரபியல் மாற்றம் பெற்று, முன்னிலும் பன்மடங்கு வேகமாகப் பரவுவதாக கிரேட் பிரிட்டன் கண்டுபிடித்திருக்கிறது. இவ்வாறு இந்தப் புதிய வகை வைரஸ் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில், அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் இவ்வகைப் புதிய வைரஸ் பீடிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலாகும் என்று அடையாளம் காணப்பட்டி ருக்கிறது. இதனைத் தொடர்ந்து, கிரேட் பிரிட்டன் முழுவதும் மிக வேகமாகப் பரவி, இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கையை திடீரென அதிகப்படுத்தி இருக்கிறது. கிரேட் பிரிட்டனில் மீண்டும் கடுமையான சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இது இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்பது நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. ஜெர்மனியைப் போன்றே இதர ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு அளவுகளில் சமூக முடக்கங்களை அறிவித்திருக்கின்றன.  

இவற்றின் விளைவாக, உலகின் பல நாடுகளில் இயல்பு வாழ்க்கையிலும் நடவடிக்கைகளிலும் பெரிய அளவில் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிச்சயமற்ற தன்மைகள் மிகப்பெரிய அளவில் தடுப்பூசிகள் மக்களிடம் போய்ச்சேரும் வரையிலும் அநேகமாகத் தொடரும்.  தடுப்பூசிகள்: தடுப்பூசித் திட்டங்கள்உலகம் முழுவதும் தொடங்கியிருக் கின்றன. புளூம்பெர்க் இதழின்படி இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் தொடங்குவதற்கு முன்பே, 51 நாடுகளில் 42.2 மில்லியனுக்கும் அதிகமானபேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன. அதாவது, ஒவ்வொரு நாளும்சராசரியாக 2.4 மில்லியன் பேர்களுக்குத்தடுப்பூசி போடப்பட்டது. சுமார், அனைத்து தடுப்பூசிகளும் ஒவ்வொருவருக்கும் இரு தடவைகள் போடப்பட்டன.முதல் தடவைக்கும் இரண்டாவது தடவைக்கும் இடையே கால இடைவெளி பல இடங்களில் வேறுபட்டிருக்கிறது.

சீனாவில் ஐந்துவிதமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் கொரோனா வேக் (Corona Vac) என்பது சீனாவில் மிகவும் விரிவானஅளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனா இந்தத் தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு  நன்கொடைகளாகவும் வணிக அடிப்படையிலும் அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தத் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 20 நாடுகள், சீனாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டி ருக்கின்றன.இந்தியா, உள்நாட்டிலேயே கோவிஷீல்டு (Covishield) என்னும் தடுப்பூசியை, கிரேட் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனகா (UK Oxford-Astra Zenecca) என்னும் நிறுவனத்துடன் உரிமத்துடனான ஒப்பந்தம் செய்துகொண்டு, தயாரித்துக் கொண்டிருக்கிறது. இத்துடன், பாரத் பயோடெக் தடுப்பூசி கேண்டிடேட் என்னும் நிறுவனத்தின் (Bharat Biotech vaccine candidate) கோவாக்சின் (Covaxin) என்னும் தடுப்பூசியையும் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.கோவிஷீல்டு என்னும் தடுப்பூசி அனைத்துவிதமான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ள அதே சமயத்தில், கோவாக்சின் என்னும் தடுப்பூசிக்கு அவ்வாறான சோதனைகள் முழுமையடைந்திடவில்லை. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆழமான கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேலும் இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கவலைகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக மக்கள் மத்தியில் இத்தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் விரிவான அளவில் தயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

நாட்டில் இதற்குமுன் மேற்கொள்ளப் பட்ட தடுப்பூசித் திட்டங்களைப் போலவே இப்போதும் இந்தத் தடுப்பூசித் திட்டம் இலவசமாகவும் அனைத்து மக்களுக்கும் போடப்பட வேண்டும் என்று கட்சி கோரி இருந்தது.கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மாநிலத்தில் இத்தடுப்பூசித் திட்டம் இலவசமாகவும் அனைவருக்கும் போடப்படும் என்று அறிவித்திருக்கிறது.தடுப்பூசித் திட்டம் அனைத்து மட்டங்களிலும் போய்ச்சேரும் வரையிலும் அதற்குப் பின்னரும்கூட, தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தனிநபர் இடைவெளி, முகக் கவசங்கள்அணிதல் மற்றும் சுகாதார நடவடிக்கை கள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றிட வேண்டியது அவசியமாகும்.

(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வெளியிட்டுள்ள ஆவணத்திலிருந்து)

;