india

img

நீதிமன்றத்திற்குத் தள்ளிவிடுவதை ஏற்க முடியாது...

புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக தீர்வு காண்பதைத் தாமதப்படுத்துவதற்காக மத்திய அரசு, பிரச்சனையை உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என்று போராடும் விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.வேளாண் சட்டங்கள் பிரச்சனையை உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்திடும்என்று மத்திய அரசு கூறியிருப்பது பிரச்சனையை இழுத்தடிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள சூழ்ச்சியே தவிர வேறல்ல என்றும், அதனை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“இப்பிரச்சனையை உச்சநீதிமன்றத்திற்குத் தள்ளிவிடுவதன் மூலம்அரசாங்கம் பிரச்சனைக்குத் தீர்வுகாணாமல் தாமதப்படுத்த விரும்புவதையே காட்டுகிறது. அவர்கள் நோக்கம் பிரச்சனையை இழுத்தடிக்க வேண்டும் என்பதும், எங்கள்கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்பதுமாகும். மக்கள் இயக்கத்தை நசுக்க அரசாங்கம் விரும்புகிறது.  அரசாங்கத்தின் இப்பரிந்துரையை நாங்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டோம்,” என்று அவர்கள் கூறினர்.ஜனவரி 26 அன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர்கள் அணிவகுப்பு வெற்றி பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். (ந.நி.)

____________________

படத்திற்கு கீழே உள்ள குறிப்பு...  

சனிக்கிழமையன்று சிங்கூ எல்லையில் போராடும் விவசாயிகளை, தொழிற்சங்கங்கள் சார்பில் ஒருமைப்பாடு தெரிவித்து, ஆதரவு முழக்கங்கள் எழுப்பினர்.... 

;