india

img

ஜேஇஇ மெயின் நான்காம்  கட்டத் தேர்வு ஒத்திவைப்பு....

புதுதில்லி:
ஜேஇஇ மெயின் நான்காம்  கட்டத் தேர்வுத்தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.ஜேஇஇ மூன்றாம் கட்டநுழைவுத்தேர்வு ஜூலை 20 முதல் 25 வரை நடத்தப்படும். நான்காம் கட்டத் தேர்வு ஜூலை 27 முதல்ஆகஸ்ட் 2 வரை நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது.

3 மற்றும் 4 ஆம் கட்டத்தேர்வுக்கு இடையே 2 நாட்கள் மட்டுமே இடைவெளி இருப்பதாகவும், அதை நீட்டிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜேஇஇ மெயின் 4ஆம் கட்டத் தேர்வுத் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் டிவிட்டர் பதிவில், ‘’மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று ஜேஇஇ 3 மற்றும் 4ஆம் கட்டத் தேர்வுகளுக்கு இடையே 4 வார இடைவெளி வழங்க தேசியத் தேர்வுகள் முகமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 4ஆம் கட்ட நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களை www.nta.ac.in, jeemain.nta.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

;