india

img

மத்திய மருத்துவக்கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு....

புதுதில்லி:
 எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட மத்திய மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான  ஐஎன்ஐ-சிஇடி-பிஜி ( INI-CET PG 2021)நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை, முதுநிலை படிப்புகளில்சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டு புதிய தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி, எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 மத்திய அரசுக் கல்லூரிகளுக்கு நீட் முதுகலை படிப்புக்கு  இனி-செட் (INI-CET) என்ற புதிய தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த தேர்வை எய்ம்ஸ் நடத்துகிறது.இந்த நிலையில், நடப்பாண்டுக்கான முதுகலை மருத்துவபடிப்புக்கான செட்  நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

;