india

img

பாஜக தலைவர்களுக்கு பஞ்சாப்பில் போலீஸ் பாதுகாப்பு... மக்கள் எதிர்ப்பால் வெளியே நடமாட முடியவில்லை....

சண்டிகர்:
விவசாயத்தையும், விவசாயிகளையும்அழிக்கும் வகையில் சட்டம் கொண்டுவந்துள்ள மத்திய பாஜக அரசுக்கு எதிராகபஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் மிகுந்த கோபாவேசத் துடன் போராடி வருகின்றனர். 

தங்கள் மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு, அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத படியும், வீதிகளில் நடமாடவோ, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ விடாமலும் செய்து வருகின்றனர்.இதனால், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகவே பாஜக தலைவர்கள்வெளியில் சகஜமாக நடமாட முடியாத நிலை உள்ளது.

பஞ்சாப் மாநிலம், முக்த்சர்மாவட்டம் ‘மாலவுட்’ பகுதியைச்சேர்ந்த பாஜக எம்எல்ஏ அருண் நரங், சில நாட்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில்,விவசாயிகள் அவர் மீதும் அவரது கார் மீதும் கறுப்பு மையை ஊற்றித் தாக்குதல் நடத்தினர். மேலும், சரமாரியாக அடித்துத் தாக்கி, ஆடைகளைக் கிழித்தெறிந்தனர். இந்தச் சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மாநில உள்துறை அமைச்சகம் திங்கட் கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் மாநிலத்தில் எங்கும் நடக்காமல் தடுக்க வேண் டும். பாஜகவினர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண் டும். தேவைப்பட்டால் பஞ்சாப் ஆயுதப் படை போலீசாரையும், கமாண்டோக்கள், ரிசா்வ் படைஆகியவற்றையும் பயன்படுத்தலாம்’ என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

;