india

img

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நீடித்திட வேண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்த தேவையில்லை..... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....

புதுதில்லி:
நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்கள்சட்டம் நீடித்திட வேண்டும் என்றும் இதில்மறு ஆய்வு எதுவும் செய்யக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல்தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உச்சநீதிமன்றம், 1991ஆம் ஆண்டுவழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஷரத்து)சட்டத்தை மறு ஆய்வு செய்திட வழியேற்படுத்தி இருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும். இந்தச் சட்டமானது, 1947ஆகஸ்ட் 15 அன்றைய தினம் வழிபாட்டுத்தலங்கள் எந்த விதத்தில் இருந்து வந்தனவோ அதே விதத்தில் தொடர்ந்திட வேண்டும் என்றும் அதில் எவ்விதமான மாற்றமும் செய்யக்கூடாது என்றும்,இவ்வாறு மாற்றம் கோரி எவ்விதமான வழக்கும் நீதிமன்றத்தில் தொடர முடியாது என்றும் கட்டளை பிறப்பித்திருந்தது.இதன் காரணமாக இந்தச் சட்டத்தின்படி 1947 ஆகஸ்ட் 15க்குப்பின்னர் எந்தவொரு வழிபாட்டுத் தலம் குறித்தும் எவ்விதமான தாவாவையும் எந்த நீதிமன்றமும் விசாரிப்பதற்கு வலுவானமுறையில் தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்தச் சட்டமானது இதுதொடர்பாக ஏதேனும் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தால் அவை இல்லாததாகிவிடுகின்றன என்றும் கட்டளைபிறப்பித்திருந்தது.

எனினும் இந்தச் சட்டமானது, அந்த சமயத்தில் தாவாவில் இருந்துவந்த பாபர்மசூதி/ ராமஜன்மபூமி வழக்கிற்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருந்தது. இவ்வாறு விதிவிலக்கு அளிக்கும் சமயத்தில் உச்சநீதிமன்றம் 2019 அயோத்திவழக்கின் தீர்ப்பில், இதர இடங்கள் தொடர்பாக இதுபோன்ற வழக்குகள் எதையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றுமீண்டும் உறுதி அளித்து தீர்ப்பளித்திருந்தது.  இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான காரணங்களை மறுஆய்வுக்குஉட்படுத்த வேண்டிய தேவை இல்லைஎன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. மத் திய அரசாங்கம் 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் உறுதியாகப் பின்பற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் கோரியிருப்பதற்குப் பதிலளித்திட வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  (ந.நி.)
 

;