india

img

பி.எப். பணத்தை எடுத்து செலவிட்ட 3.5 கோடிப் பேர்... 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் காலி...

புதுதில்லி:
கொரோனா தொற்று, அதையொட்டி வேலை - வருவாய் இழப்பு, மருத்துவச் செலவு போன்றவற்றால், சுமார் 3 கோடியே 50 லட்சம் பேர் தங்களின் பி.எப். பணத்தைஎடுத்து செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி.எப். பணம் என்பது, ஒவ்வொருவரும் தங்களின் வயதான காலத்தில் பயன் படுத்துவதற்காக சேமித்து வைக்கும் ஒன்றாகும். இதனை பெரும்பாலானோர் அவ்வளவு எளிதில் எடுத்துச் செலவிடுவதில்லை. தங்களின் சேமிப்புத் தொகைக்கு ஓரளவுக்கு நல்ல வட்டி கிடைப்பதும் அதற்குக் காரணமாகும்.ஆனால், கொரோனா தொற்று காலத்தில், பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியுதவி எதையும் அறிவிக்காத மத்திய பாஜக அரசு,ஏதோ பெரிய சலுகை அளிப் பதுபோல, வருங்கால வைப்பு
நிதி சந்தாதாரர்கள், அவரவர்களின் கணக்குகளில் உள்ள சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துக் கொள் ளலாம் என்று அனுமதி அளித் தது. 

மக்களும் வேலை, வருவாய் இழப்புக்கு உள்ளாகி, மருத்துவ செலவுகளை எதிர்கொண்டிருந்ததால், வேறு வழி தெரியாமல் வருங்கால வைப்பு நிதி சேமிப்பைஎடுத்துச் செலவிட்டனர். தற்போது கொரோனா 2-ஆவது அலைக் காலத்தில் இந்தஎண்ணிக்கை மேலும் அதிகமாகத் துவங்கியுள்ளது.இந்நிலையில்தான், 2020 ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் மொத்தம் 3.5 கோடி பேர் தங்களது பிஎப் சேமிப்பிலிருந்து, 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எடுத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக, கொரோனா அட்வான்ஸ் பிரிவின் கீழ் மட்டும் 2020 ஏப்ரல் முதல் 2021 மே 12 வரை மொத்தம் 72 லட்சம் பேர் சுமார் ரூ. 18 ஆயிரத்து 500 கோடியை எடுத் துள்ளனர்

;