india

img

பெட்ரோல், விலை உயர்வால் மக்களுக்குப் பாதிப்பில்லை.. பீகார் பாஜக அமைச்சர் பேச்சு....

பாட்னா:
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 12-ஆவது நாளாக அதிகரித்துள்ள. சில இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.குறிப்பாக, மும்பையிலும், ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா மாவட்டத்திலும், மத்தியப்பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்திலும் பெட்ரோல் லிட்டர் 102 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுதவிர, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் பொதுமக்களை துயரத்தில் தள்ளியுள்ளது.

இந்நிலையில், சாதாரண மக்கள் அனைவரும் பேருந்தில்தான் போகின்றனர் என்பதால், அவர்கள் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள் என பீகார் மாநில பாஜக அமைச்சர் நாராயண் பிரசாத் தெரிவித்துள்ளார்.“சாதாரண மக்கள் பேருந்தில்தான் பயணிக்கின்றனர். சிலர் மட்டுமே சொந்த வாகனத்தில் பயணிக்கின்றனர். எனவே சாதாரண மக்களுக்கு பாதிப்பில்லை” என்று கூறியிருக்கும் அவர், பணவீக்கத்துக்கும், விலை உயர்வுக்கும் மக்கள் பழகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். “விலை உயர்வால் நானும்தான் பாதிக்கப்படுகிறேன். எனினும் மக்களுக்கு இது பழகி விடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

;