india

img

கொரோனா கால்சிகைன் மருந்து  பரிசோதனைக்கு அனுமதி....

புதுதில்லி:
கொரோனா நோயாளிகளுக்கு கால்சிகைன் மருந்தைப் பயன்படுத்துவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அறிவியல் -தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆர் மற்றும் ஹைதராபாத்தின் லக்சாய் லைஃப் சயின்சஸ் தனியார்நிறுவனத்திற்கு, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில்கால்சிகைன் மருந்தை பயன்படுத்து வதற்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரகத்தின் ஆலோசகரான டாக்டர் ராம் விஷ்வகர்மா கூறுகையில், இருதயம் சார்ந்த இணை நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகளுடன் கால்சிகைன் மருந்தையும் இணைத்து வழங்குவதன் மூலம் அவர்கள் விரைவாகக் குணமடைவார்கள் என்றார்.

;