india

img

கிராமங்களுக்கும் பரவுகிறது விவசாயிகள் கிளர்ச்சி...... இன்று நாடு தழுவிய சாலை மறியல்.....

புதுதில்லி:
மத்திய அரசின் அடக்குமுறை முயற்சிகளில் இருந்து தப்பிய பின்னர் கிராமங்களுக்கு போராட்டத்தை பரப்ப விவசாயிகள் அமைப்புகள் தயாராகி வருகின்றன. மகா பஞ்சாயத்துகள் மற்றும் கூட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டப்பட்டு விவசாயிகள் மேலும் மேலும் போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

விவசாய அமைப்புகள் சனியன்று (பிப்.5) நாடு தழுவிய அளவில் தேசியநெடுஞ்சாலைகளில் தடை ஏற்படுத்த தயாராகி வருகின்றன. விவசாயிகளின் போராட்டத்தை ஏற்று நடத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததால் அரசாங்கம் நாடாளுமன்றத்திலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது. வியாழனன்று தில்லிஎல்லையில் 15 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறை யினரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். சு.வெங்கடேசன், ஏ.எம். ஆரிப், (சிபிஎம்), கனிமொழி, திருச்சி சிவா (திமுக), ஹர்சிம்ரத் கவுர் (அகாலிதளம்), ச வுகதா ராய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்துவரும் சர்வதேச ஆதரவும் மோடி அரசுக்கு ஒரு தலைவலியாக இருந்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு எதிரான வழக்கு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.யு.எஸ்.தூதரகம் அரசாங்கம் விவசாயிகளு டன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா மற்றும்உ.பி.யில், விவசாயிகள் அமைப்புகளால் அழைக்கப்படும் மகா பஞ்சாயத்துகளில் லட்சக்கணக்கான மக்கள்பங்கேற்கின்றனர். தில்லியில் உள்ளஎதிர்ப்பு மையத்திற்கு ஒரு குடும்பத்தில் ஒருவரையாவது அனுப்ப வேண்டும் என்று மகா பஞ்சாயத்துகள் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில் சிங்கு, திக்ரி,காசிப்பூர், ஷாஜகான்பூர் போராட்டங்களுக்கு விவசாயிகள் திரண்டனர். காவல்துறையினர் ஒரு சில  இடங் களில் சாலையிலிருந்து ஆணியையும் முள்வேலிகளையும் அகற்றினர்.

                                      **********************  

தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை ஆதரவு

மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பிப்ரவரி 6 ஆம் தேதியன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்திட விடுக்கப்பட்டுள்ள அறைகூவலுக்கு, மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை தன் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.மத்தியில் ஆளும் மோடி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் (சம்யுக்த கிசான் மோர்ச்சா) சார்பில் பிப்ரவரி 6 அன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.பிப்ரவரி 6 அன்று நடைபெறும் சாலை மறியல் போராட்டத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை தனது முழு ஆதரவை விரிவாக்கிக் கொள்கிறது. மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகள் நடத்திடும் இப்போராட்டத்திற்குத் தொழிலாளர்களும் தங்கள் ஆதரவினையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்திட வேண்டும்.   இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;