india

மக்களவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., தாக்கு... 1ம் பக்கத் தொடர்ச்சி...

1ம் பக்கத் தொடர்ச்சி

தாரை வார்த்திடும் நடவடிக்கைகள் நாட்டின் நலன்களைக் காவு கொடுத்திடும். இது, ஆட்சியாளர்கள் கூறிவரும் சுயசார்பு கோஷத்தைக் கேலிக்கூத்தாக்கிடும்.

நிதியமைச்சரின் விநோதமான வாதம்
நாடு, முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மிக மோசமான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இந்த பட்ஜெட் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுத்திட முன்வரவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வேலையிழந்த கோடிக்கணக்கான மக்களுக்கு உதவக்கூடிய விதத்தில் எவ்விதமான திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. மாறாக, பாஜக தனியார்மயத்தை அமல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல்தான் பட்ஜெட்டின் முன்மொழிவுகளில் காணப்படுகின்றன. கோவிட்-19 நாட்டைப் பீடிப்பதற்கு முன்பே நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து மீள்வதற்கும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, மக்களின் கைகளில் பணப்புழக்கம் ஏற்படுவதற்கும், பொருளாதார நிபுணர்கள்கூறிய பரிந்துரைகள் எதையும் இந்தஅரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை என்பது இந்த பட்ஜெட்டில் நன்கு பிரதிபலிக்கிறது.
நிதியமைச்சர் தன் உரையின்போது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்ப்பதும், நாட்டின் சொத்துக் களை விற்பதும் நாட்டின் பொருளாதார அடித்தளத்தை விரிவாக்கிட உதவும் என்று விநோதமான முறையில் வாதங்களை உதிர்த்திருக்கிறார்.மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்க க்கூடிய சூழ்நிலையில், விவசாயிகளும், விவசாயத் துறையும் எதிர்கொள்ளும் பிரச்ச னைகளைத் தீர்த்துவைக்கும் விதத்தில் வலுவான திட்டமோ, முன்மொழிவோ எதுவும் பட்ஜெட்டில் காணப்படவில்லை.   இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.   (ந.நி.) 

;