india

img

எத்தனால் உற்பத்தி ஆலைகள் அமைப்பு.... வழிகாட்டுதல் குழு அமைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆலோசனை....

புதுதில்லி:
கரும்பு, இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள அரிசி, சோளம்ஆகியவற்றிலிருந்து முதலாம் தலைமுறை எத்தனாலைஉற்பத்தி செய்வதற்கான வடிசாலைகளை அமைப்பதற்கானஅறிவிப்பை மத்திய அரசு ஜனவரி 14 அன்று வெளியிட்டது.

2022 ஆம் ஆண்டுக்குள், 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல், 2025 ஆம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் கலந்தபெட்ரோல் விநியோகிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.இதில் தொழில்நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்கவும்,மாநில அரசுகளின் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை செயலாளர் தலைமையில்  காணொலிக் காட்சி மூலம்நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில அரசுகள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் இத்திட்டத்தின் முழு விவரங்களை தெரிவித்தன. இந்த திட்டத்திற்கான வடி ஆலைகளை அமைப்பதற்கான நிலம், சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றை விரைவில் வழங்கும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கானவழிகாட்டுதல் குழுவை, ஒவ்வொரு மாநிலமும் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

;