india

img

தடுப்பூசியிலும் பாரபட்சத்தை புகுத்திய கர்நாடக பாஜக அரசு? எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம்...

பெங்களூரு:
கர்நாடகத்தில் அர்ச்சகர்களுக்கு மட்டும் சிறப்புத் தடுப்பூசித் திட்டம் துவங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றாகிவிட்ட நிலையில், மக்கள் தடுப்பூசிக்காகஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். மோடி அரசு போதிய தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யாத நிலையில்,கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகளுக்காக நீண்ட வரிசையில் வெயிலில் காத்துக் கிடப்பதும்,அப்படியும் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதுமாக உள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம்
பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத் தில் அர்ச்சகர்களுக்கு மட்டும் சிறப்புதடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இத்திட்டத்தை கர்நாடக துணைமுதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் தொடங்கி வைத்துள்ள நிலையில், தடுப்பூசியிலும்கூட சாதியப் பாரபட் சத்தையும், சாதிய மேலாதிக்கத்தையும் அனுமதிக்கும் அணுகுமுறையாக இதுஉள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர் களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த தடுப்பூசி போடும் திட்டமே, முழுக்க முழுக்க சாதி அடிப்படையில் பிராமணர்களை மனத்தில் வைத்து தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதனை கேள்வி கேட்டவர்கள் தடுப்பூசி போடும்மையத்தில் இருந்து துரத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஹரிபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.கொரோனா தடுப்பூசி போடுவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்நிலையில், முன்களப் பணியாளர் பட்டியலிலேயே இல்லாத அர்ச்சகர்களுக்கு திடீரென தடுப்பூசியில் முன்னுரிமை வழங்குவது எப்படி? என்று சமூகவலைதளங்களிலும் பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

;