india

img

‘டைம்’ இதழின் அட்டைப் படத்தில் தில்லியில் போராடும் பெண் விவசாயிகள்....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில்  போராடும் பெண் விவசாயிகளை டைம் இதழ் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.வரலாற்றுச்சிறப்பு மிக்க விவசாயிகள்  கிளர்ச்சியின் 100 ஆவது நாளையொட்டி டைம் பத்திரிகை மார்ச் இதழ்  அட்டைப்படத்தில் தில்லியில் போராடும் பெண் விவசாயிகள் இடம்பெற்றுள்ளனர்.

“இந்த சட்டங்கள் எங்களைக் கொல்லும். எங்களுக்கு இருக்கும் மிகக் குறைந்த வசதிகள்கூட இல்லாமல் போகும்”என்று பஞ்சாபின் தல்வாண்டி விவசாயி அமன்தீப் கவுர் டைமிடம் கூறியுள்ளார். “ பெண்களை விவசாயிகளாக கருத பலர் தயங்குகிறார்கள். பண்ணையில் அவர்களின் உழைப்பு மகத்தானது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது.“பெண்கள் விவசாயிகளாக பிரதான நீரோட்டத்தில் இடம்பெறுகிறார்கள்” என்று திக்ரி எல்லையில் உள்ள பஞ்சாப் விவசாயிகள் சங்க உறுப்பினர் ஜஸ்பீர் கவுர் நாத் கூறினார்.முதியோர் மற்றும் பெண்கள் போராட்டத்தி லிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கோரியிருந்தார். ஆனால் அதன் பின்னர், அதிகமான பெண்கள் போராட்டத்தில் இணைந்துள்ள னர். “நாங்கள் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” இது ஆண்களின் கிளர்ச்சி மட்டுமல்ல. நாங்கள் இரவும் பகலும் பண்ணைகளில் ஆண்களுடன் வேலை செய்கிறோம். நாங்கள் விவசாயிகளாக இருக்கிறோம்” என்று மேற்கு உத்தரப்பிரதேசம் ராம்பூரைச் சேர்ந்த ஜஸ்பீர் கவுர் கூறியுள்ளார்.

;