india

img

ஹரியானா கிராமங்களில் விரட்டியடிக்கப்படும் அதிகாரிகள்..... மின் கம்பங்களைக் நட முடியவில்லை...

சண்டிகர்:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை, விவசாயிகள் 100 நாட்களைத் தாண்டி தொடர்ந்து வருகின்றனர்.முன்னதாக அவர்கள், தங்களின்போராட்டத்தை விளக்கி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்டமாநிலங்களில் நடத்திய மகா பஞ்சாயத்துக் கூட்டங்கள், தற்போது, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையில் இருக்கும் நியாயங்கள், மோடி அரசுமற்றும் பாஜக மீதான கோபமாக மக்கள்மத்தியில் மாறியுள்ளது. இதனால், பொதுமக்களே ஆங்காங்கே போராட்டக்களத் தில் இறக்கியுள்ளனர்.

குறிப்பாக, ஹரியானாவில் உள்ளஜில்த் கிராம மக்கள், புதிய வேளாண்சட்டங்களை எதிர்க்கும் பதாகைகளுடன், தன்னெழுச்சியாக அங்குள்ளமின் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.அதுமட்டுமன்றி, அரசு மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறும்வரை, கிராமத்தில் எந்த அரசு வேலைகளையும் செய்ய நாங்கள் அனுமதிக்கமுடியாது, அதிகாரிகளை கிராமங்களுக்குள் நுழையவிடவும் மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.இந்த விவகாரம் மின் கழகத்தின்உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப் படவே, நிறுவனத்தின் எஸ்.டி.ஓ வினீத்குமார் தலைமையில் கிராமத்திற்கு வந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு முழு கிராமத்திலும் மின்கம் பங்கள் நிறுவப்பட்டதாகவும், அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கெஞ்சியுள்ளனர். ஆனால், கிராம மக்கள் அதைஏற்கத் தயாராக இல்லை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை,யாரையும் ஊருக்குள் விட மாட்டோம் என்று உறுதியுடன் தெரிவித்து, அதிகாரிகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

;