india

img

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 10.85 கோடியைக் கடந்தது....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசித் திருவிழாவின் மூன்றாவது நாளான செவ்வாயன்று நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 10.85 கோடியை கடந்துள்ளது.

செவ்வாயன்று காலை 7 மணி வரை,16 லட்சத்து 08 ஆயிரத்து 448 முகாம்களில்‌ 10 கோடியே 85 லட்சத்து  33 ஆயிரத்து 085பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 41 லட்சத்து 69 ஆயிரத்து 609 டோஸ்கள் வழங்கப்பட்டு, தினசரி செலுத்தப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கையில் சர்வதேசஅளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், தில்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளா ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.இந்தியாவில் தற்போது 12 லட்சத்து 64 ஆயிரத்து 698 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 9.24 சதவீதமாகும். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியே  22 லட்சத்து 53 ஆயிரத்து 697 பேராக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97,168 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். 

;