india

img

தலித் சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய ராகுலுக்கு நோட்டீஸ்.... டுவிட்டரையும், குழந்தைகள் ஆணையம் விட்டு வைக்கவில்லை....

புதுதில்லி:
தில்லியில் 9 வயது தலித் சிறுமிபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பாதிக்கப்பட்ட தலித் பெற்றோரை நேரில் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். நீதி கிடைக்க துணை நிற்போம் என்றும் உறுதியளித்தனர். இதுதொடர்பான செய்திகள், படங்களை டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தனர். ‘தலித்தின் மகளும் இந்த தேசத்தின் மகளே!’ என்றுராகுல் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்தான், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம், டுவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கும் ராகுல் காந் திக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.“பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அடையாளத்தை புகைப் படம் வாயிலாக வெளிப்படுத்துவது போக்சோ சட்டத்தின் படி தவறானது. எனவே, டுவிட்டர் இந்தியா நிறுவனம், ராகுலின் சம்பந்தப்பட்ட பதிவைநீக்க வேண்டும். இது தொடர்பாககாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என்று குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.தலித் சிறுமிக்கு நேர்ந்த மோசமான முடிவின் மீது, வேகம் காட்டாத தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம், பெற்றோரின் புகைப்படத்தை பகிர்ந்ததை மட்டும் பிடித்துக் கொண்டு, தாவிக் குதித்துள்ளது.

;