india

img

No more 12 hours... இனி 12 மணிநேரம்....

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணிநேரம் மட்டுமே வேலை செய்யும் உரிமையை பறிக்க பாஜக அரசு தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய தொழிலாளர்- வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் அபூர்வா சந்திரா கூறுகையில், “தொழிலாளர் சட்டத்தில் புதிய விதிகளை உருவாக்கியுள்ளோம். இதன் படி, நிறுவனங்கள் இனிமேல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை வைக்கலாம். மீதமுள்ள 3 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புஅளிக்க அனுமதிக்கப்படும். ஆனால், வேலைநாள் நாள்தோறும் 12 மணி நேரமாக இருக்கும்.

வாரத்தில் வேலை நாட்கள் குறையும் போது, வேலை செய்யும் நேரமும் அதிகரிக்கும்.வாரத்துக்கு 48 மணி நேரம் பணியாற்ற வேண்டியது இருக்கும். இதன்படி நாள்தோறும் 12 மணி நேரம் 4 நாட்களுக்குப் பணியாற்ற வேண்டும். இந்த விதிகளை நிறுவனங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம்செய்யாது. விரும்பினால், நிறுவனங்கள் இந்த விதிகளைச் செயல்படுத்திக் கொள்ளலாம். இந்தப் புதிய விதிகளை உருவாக்குவது தொடர்பாக அனைத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் முழுமையாக முடிந்துவிடும். ஊதியத்துக்கான விதி, தொழில் துறை உறவுகள், பணியிடப் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணியாற்றும் சூழல் மற்றும் சமூகப் பாதுகாப்பு விதி ஆகியவற்றை  விரைவில் அரசு வெளியிடும்” என்று தெரிவித்தார்.தொழிலாளர் சட்டத்தில்  விதிகளை உருவாக்கி நடைமுறைப்படுத்திவிட்டால் இதைச் செயல்படுத்த நிறுவனங்கள் அரசிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறப்படுகிறது.

;