india

img

வேலைசெய்யாத பி.எம். கேர்ஸ் வெண்டிலேட்டர்கள்.... மகாராஷ்டிராவில் நோயாளிகள் அவதி....

புதுதில்லி:
கொரோனா 2-வது அலை தீவிரம் எடுத்துள்ள நிலையில், வெண்டிலேட்டர்கள் முக்கியத் தேவையாக மாறியுள்ளன.மத்திய அரசு கடந்த ஆண்டேபி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து பல ஆயிரம் வெண்டிலேட்டர்களுக்கு ஆர்டர் கொடுத்தது. அப்போதேதரம் குறைந்த வெண்டிலேட்டர் களை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஊழல் முறைகேடுகள் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

எனினும், தங்களுக்கு ‘வேண் டிய’ நிறுவனங்களிடம் இருந்தே மோடி அரசு வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்தது.இந்நிலையில்தான் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தவெண்டிலேட்டர்கள் வேலை செய்யவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த வாரம் பஞ்சாப்பில் இப்பிரச்சனை எழுந்தது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்திலும், மோடி அரசு வழங்கிய 1352 வெண்டிலேட்டர்களில் 490 வெண்டிலேட்டர்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நோயாளிகள் தவிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தரம்குறைந்த வெண்டிலேட்டர் கொள்முதல் தொடர்பாகவிசாரணை நடத்த வேண்டும் என்றுகாங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

;