india

img

நாட்டில் புதிய பணியமர்த்தல்கள் 15% குறைந்தது..... வேலைவாய்ப்பு இணையதளமான நாக்ரி.காம் ஆய்வறிக்கையில் தகவல்....

புதுதில்லி:
நாட்டில் புதிய பணியமர்த்தல்கள், மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் 15 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாக, வேலைவாய்ப்பு இணையதளமான நாக்ரி.காம் (naukri.com) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக இருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்குஅமல்படுத்தப்பட்டு வருகின்றன. தொழில் - உற்பத்தி நிறுவனங்கள்முடங்கியுள்ளன. ஏற்கெனவே, பணியில் இருந்தவர்களே லட்சக் கணக்கான எண்ணிக்கையில் வேலை இழப்பைச் சந்தித்துள்ள னர். இந்நிலையில்தான், புதிய வேலைவாய்ப்பிலும் கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் 15 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆன்லைன்வேலை தேடுதல் தளமான நாக்ரி.காம் கூறியுள்ளது. நாக்ரி ஜாப்ஸ்பீக் (JobSpeak) குறியீடு 2,072 புள்ளிகளாக குறைந்துள்ளதாகவும், இது 2021 மார்ச் மாத அளவை விட 15 சதவிகிதம் குறைவு என்று அந்த இணையதளம் கூறியுள்ளது.

ஐ.டி-மென்பொருள் துறை, வேலை அளிப்பில், கடந்த சில மாதங்களாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், ஏப்ரலில் ஐ.டி. மென்பொருள் துறையிலும் வேலைவாய்ப்பு 12 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.நுகர்வோர் பொருட்கள் அல்லது எப்எம்சிஜி துறைகள் மற்றும் தொலைத் தொடர்புத்துறைகளில் வேலையளிப்பு 15 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.அதிகபட்சமாக சில்லரை விற்பனைத் துறை, மார்ச் மாதத்தை விடவும் ஏப்ரல் மாதத்தில் 33 சதவிகித அளவிற்கு வேலையளி ப்பில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதேபோல, மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாத பணியமர்த்தல் நடவடிக்கைகளில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறைகள் 36 சதவிகிதம், வங்கி மற்றும் நிதித்துறைகள்-26 சதவிகிதம் மற்றும் கற்பித்தல் - கல்வித்துறைகள் 24 சதவிகிதம் என மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.2021 மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி கண்டிருந்த ரியல் எஸ்டேட் துறை ஏப்ரல் மாதத்தில் 33 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

நாட்டின் முக்கிய நகரங்கள் அளவில் பார்த்தால், பணியமர்த்தல் நடவடிக்கைகளில் அதிகபட்சமாக மும்பை 20 சதவிகிதம், தில்லி 18 சதவிகிதம், பெங்களூரு மற்றும் சென்னை நகரங்கள் தலா 10 சதவிகிதம், ஹைதராபாத் 4 சதவிகிதம் என வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டிற்கான துறைகள் மட்டுமே மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் சற்றுக் குறைவான பாதிப்பை அதாவது, காப்பீட்டுத்துறை 5 சதவிகிதம், பார்மா மற்றும் பயோடெக் 9 சதவிகிதம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகள் 10 சதவிகிதம் என பணியமர்த்தலில் பாதிப்பை சந்தித்துள் ளன என்று நாக்ரி. காம் குறிப் பிட்டுள்ளது.‘கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட இடையூறு, பணியமர்த்தல் செயல்பாட்டை பாதித்துள்ளது, இது 2021 ஏப்ரலில் 15 சதவிகிதம் என்ற தொடர்ச்சியான சரிவுக்குவழிவகுத்துள்ளது. இருப்பினும், வேலைச் சந்தையில் தற்போதையதாக்கம் 2020 ஏப்ரலில் நாம் கண்டதை விட மிகக் கடுமையானதாக உள்ளது என்று நாக்ரி.காமின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் தெரிவித்துள்ளார்.

;