india

img

இரும்பு வேலிகளுக்கு அருகே ரோஜா செடிகளை நடும் விவசாயிகள்.... பாஜக அரசின் காவல்துறைக்கு பதிலடி....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி-உத்தரப்பிரதேச எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் இரும்பு வேலிகளையும், கம்பிகளையும் மத்திய பாஜகஅரசின் காவல்துறையினர் அமைத்துள்ளனர்.  அந்த வேலிகளுக்கு அருகே ரோஜா செடிகளை நட்டு விவசாயிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் பல்வேறுமாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடக்க,அவர்கள் உள்ளே நுழைய முடியாதபடியும்  மத்திய பாஜக அரசும் அதன் காவல்துறையும் இரும்புக்கம்பி, வேலிகள் உள்பட 14 வகையாக தடுப்புகளை அமைத்துள்ளனர். 

இந்நிலையில் காவல்துறையினர் அமைத்துள்ள பலஅடுக்கு தடுப்பு, இரும்பு கம்பி வேலி ஆகியவற்றுக்கு அருகே விவசாயிகள் ரோஜா செடிகளையும், அழகிய பூக்கள் பூக்கும் செடிகளையும் நட்டு பதிலடிகொடுத்தனர்.இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன்தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில்,  காவல்துறையினர் இரும்பு கம்பி வேலிகளைவிவசாயிகளைச் சுற்றி அமைத்தார்கள். நாங்கள் அவர்களுக்காக ரோஜா செடிகளைஇரும்பு வேலிகளுக்கு அருகே அமைத்துள்ளோம். இது எங்களின் மனநிலையை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைதான். சாலையோரத்தில் ரோஜா செடிகளை வளர்க்கும் திட்டம் நடந்து வருகிறது. தில்லி-டாபர் திராஹா சாலையின் ஓரத்தில்ஒரு பூந்தோட்டத்தை விவசாயிகள் அமைத்துள்ளனர். சாலையின் ஓரத்தில் முகம் சுளிக்கும்வகையில் அசுத்தமாக இருந்த இடத்தை விவசாயிகள் சுத்தப்படுத்தி, அதில் நறுமணம் கொடுக்கும் பலவகை பூச்செடிகளை நட்டு விவசாயிகள் வளர்த்து சூழலை அழகாக மாற்றிவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

;