india

img

காலத்தை வென்றவர்கள் ; முசாபர் அகமது பிறந்தநாள்....

சிங்கார வேலரைப் போல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியான முசாபர் அகமது 1889 ஆகஸ்ட் 5ல் இன்றைய வங்க தேசத்தின் முசாபர்பூரில் பிறந்தார். 1916-17ல் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மாநாடுகளில் பார்வையாளராக பங்கேற்றார். நவயுகம் பத்திரிகை துவங்கி நடத்தினார். காவல்துறை அடக்குமுறையை கண்டித்து எழுதியதால் காப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. 1921ல் லெனின் எழுதிய புத்தகங்களும் மக்களின் மார்க்ஸ் நூலும் கிடைத்தது. மார்க்சியத்தின் பால் கவரப்பட்டார். கம்யூனிஸ்ட் அகிலம் போன்ற பத்திரிகைகள் மேலும் வெளிச்சம் தந்தன. 

1923ல் சௌகத் உஸ்மானி முசாபரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கான்பூர் சதிவழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. ஆயினும் நோயால் பாதிக்கப்பட்டதால் 1925 செப்.12ல் விடுதலையானார். சிங்காரவேலர் தலைமையில் நடந்த கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்து கொண்டார். 1926ல் கணவாணி பத்திரிகையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டார். 1927ல் கட்சியின் நிர்வாகக்குழுவுக்கு தேர்வு பெற்றார். ஏஐடியுசியில் உதவி தலைவரானார். சென்னையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார். 1929ல் மீரட் சதி வழக்கில் கைதாகி 1934ல் விடுதலையானார். 1948ல் கைதாகி 1951 ல் விடுதலையானார். கட்சியின் தேசிய கவுன்சிலில் 1964 வரை செயல்பட்டார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதில் ஈடுபட்டார். மத்தியக்குழு உறுப்பினராக செயல்பட்ட அவர் 1973 டிசம்பர் 8ல் காலமானார்.  

பெரணமல்லூர் சேகரன்

;