india

img

தொற்றை மோசமாக கையாண்ட பிரதமர்களில் மோடிக்கு முதலிடம்.... ஆஸ்திரேலியாவின் ‘தி கான்வெர்சேஷன்’ ஏடு மதிப்பீடு...

புதுதில்லி:
கொரோனா தொற்றை மிகமோசமாகக் கையாண்ட தலைவர்கள் பட்டியலில், இந்தியப்பிரதமர் மோடிக்கு, சர்வதேச செய்தித்தளமான ‘தி கான்வெர் சேஷன்’ (The Conversation) முதலிடம் கொடுத்துள்ளது.ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘தி கான்வெர் சேஷன்’, ‘கொரோனாவை மிகமோசமாகக் கையாண்ட பிரதமர் கள் யார்?’ என்று டுவிட்டரில் நடத்திய கருத்துக்கணிப்பில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இந்திய பிரதமர் மோடியைக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை குறிப்பிட்டு கட்டுரைஒன்றைத் தீட்டியுள்ள ‘தி கான்வெர்சேஷன்’ ‘ஒரு நாளைக்குசுமார் 4 லட்சம் புதிய கொரோனாதொற்று பாதிப்பை பதிவு செய்துஉலகளாவிய அளவில் தொற்றுநோயின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.ஆக்சிஜன்இன்றியும், உயிர் காக்கும் மருந்துகள் இன்றியும் கொரோனாநோயாளிகள் மருத்துவமனைகளில் இறந்து கொண்டிருக்கின் றனர். படுக்கை வசதிகள் இல்லாமல் கொரோனா நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர முடியாமல் அவதிப் படுகின்றனர். நாட்டின் இத்தகைய சோகத்திற்கு இந்தியர்கள் குற்றம்சாட் டும் ஒரு மனிதர் என்றால் அவர்பிரதமர் நரேந்திர மோடியாக இருக்கிறார். ஏனெனில், அவர்தான் 2021 ஜனவரியிலேயே, இந்தியா கொரோனாவை திறம்படக் கையாண்டு மனிதகுலத்தை காப் பாற்றியதாக அறிவித்தார். அவரது சுகாதாரத்துறை அமைச்சரும், மார்ச் மாதமே கொரோனாவின் எண்ட்கேமை அடைந்துவிட்டதாகப் பெருமையுடன் கூறினார்; ஆனால், இன்று நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரை கொரோனா காவு வாங்கி வருகிறது. 

கொரோனா 2-ஆவது அலை பரவலைத் தடுக்க மோடி அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, மத விழாவை (கும்பமேளாவை) மோடி அரசு அனுமதித்துமிகப்பெரும் தொற்றுப் பரவலுக்குக் காரணமாகி விட்டது’ என்று ‘தி கான்வெர்சேஷன்’ குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.

;