india

img

மோடி நாடாளுமன்றம் வந்து செல்ல சுரங்கப்பாதை.... ரூ. 971 கோடி நிதி ஒதுக்கீட்டில் இதற்கும் செலவு....

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு, ஜனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை, குடியரசு என இந்தியாவின் முந்தைய பெருமைகள் அனைத்தையும் தகர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போதுள்ள சிறப்பு வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தின் மீதும் அதற்கு விருப்பமில்லை.

இதனால், கொரோனா நிதி நெருக்கடிக்கு இடையிலும் 971 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து,  ‘சென்டிரல் விஸ்டா புராஜெக்ட்’ என்ற திட்டத்தின் கீழ், முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்றக் கட்டத்தையும் கட்டி வருகிறது. டாடா நிறுவனம் இப்பணியை மேற்கொண்டுள்ளது.இந்தியா கேட் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையுள்ள சாலை தற்போது ராஜபாதையாக உள்ள நிலையில், அதனுடன் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை இணைப்பது, மத்திய அரசின் அனைத்துஅமைச்சகங்களும் இந்த ராஜபாதையை சுற்றியே அமைப்பது; அதற்கேற்ப புதிய நாடாளு மன்றத்தின் அருகில், தற்போதுஉள்ள வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பிரதமருக்கும், குடியரசுத் துணைத் தலைவருக்கும் புதிதாக வீடுகள் கட்டுவது, இதைப்போல எம்.பி.க்களுக்கு ‘ஸ்ரம் சக்திபவன்’ வளாகத்தில் அறைகள் கட்டுவது என்றுபணிகள் போய்க்கொண்டிருக் கின்றன.இந்நிலையில், பிரதமர் போன்ற விவிஐபி தலைவர்கள் வரும் பாதையில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும், பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இல்லங்களிலிருந்து புதிய நாடாளுமன்றத் திற்கு சுரங்கப் பாதை அமைக்கப்படுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சுரங்கப்பாதைகளில் மின்சார வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

;