india

img

எரிபொருள் விலை உயர்வுக்கு பதிலளிக்க முடியாத மோடி அரசு... மார்ச் 15 வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மக்களை வதைக்கும் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடச்சியாக வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர். இதுகுறித்து விவாதம்நடத்தக்கூட மத்திய மோடி அரசு மறுத்தது.இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இரு அவைகளையும் மார்ச் 15 வரை ஒத்திவைத்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்களன்று  தொடங்கியது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தது.

அந்த நோட்டீஸ்நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு அவைகளும் செவ்வாயன்று முதல் வழக்கமான நேரப்படி காலை 11 மணிக்குசெயல்படத் தொடங்கின. மக்களவை கூடியவுடன், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப் பட்டது ஆனால், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து விவாதிக்கக்கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் புதனன்று மாநிலங்களவை யில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி  அவை பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்திருந்தார். அதன்பின் மீண்டும் அவை கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதனை தொடர்ந்து அவை 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவை 2 மணிக்கு மீண்டும்  கூடிய நிலையில் மார்ச் 15 ஆம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளானமக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விவசாயிகள், மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர்.

;