india

img

விவசாயிகளிடம் பணிவதைத் தவிர மோடி அரசுக்கு வேறு வழியில்லை....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவலுக்கிணங்க பிப்ரவரி 18 அன்றுநாடு முழுவதும் நடைபெற்ற ரயில்மறியல் போராட்டத்தை வெற்றிபெறச் செய்த விவசாயிகளுக்கு பாராட்டுக் களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள அகில இந்திய விவசாயிகள்சங்கம், விவசாயிகளின் கோரிக்கை களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியுள் ளது. 

ரயில் மறியல் போராட்டம் குறித்துஅகில இந்திய விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களும் கலந்துகொண்டதைப் பார்க்க முடிந்தது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு வந்துள்ள தகவல்களின்படி, மேற்கு வங்கத்தில் 77 ரயில்நிலையங் களிலும், ஜார்க்கண்டில் 65 ரயில் நிலையங்களிலும், தெலுங்கானாவில் 55 ரயில் நிலையங்களிலும், ஒடிசாவில் 30 ரயில் நிலையங்களிலும், ஆந்திராவில் 23 ரயில் நிலையங்களிலும், ராஜஸ்தானில் 21 ரயில் நிலையங்களிலும், கர்நாடகாவில் 9 ரயில் நிலையங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 11 ரயில்நிலையங்களி லும், திரிபுராவில் 5 ரயில் நிலையங்களிலும், மகாராஷ்டிராவில் 5 ரயில்நிலையங்களிலும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் மத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. நாடு முழுதும் இப்போராட்டம் மகத்தான முறையிலும் அமைதியாகவும் நடைபெற்றுள்ளது.

குவாலியரில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் பாதல் சரோஜ், மாவட்டச் செயலாளர் அகிலேஷ் யாதவ்  உட்பட 100 போராளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான்  தலைமையிலான பாஜக அரசாங்கம் எதேச்சதிகார மனோபாவத்துடன் நடந்துகொண்டிருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்தெரிவித்துக்கொள்கிறது.பீகாரில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் லல்லான் சௌத்ரி உட்பட பலர் பேட்டியாவில் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் பங்கார்பேட்டிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.சாகர்உட்பட 500 பேர் கைது செய்யப்பட் டார்கள்.

மோடி அரசுக்கு எச்சரிக்கை 
ரயில் மறியல் போராட்டம் மகத்தானவெற்றி பெற்றிருப்பது மோடி அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கையாகும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் போராட்டங்களைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதை இதன்மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மோடி அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து மக்கள்பிரிவினரின் ஆதரவுடனும் மகத்தானமுறையில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு செவிமடுப் பதைத் தவிர வேறு வழி இல்லை.அகில இந்திய விவசாயிகள் சங்கம் நாடு முழுவதும் இப்போராட்டத்தை பெரிய அளவில் வெற்றிபெறச் செய்தவிவசாயிகளுக்குப் பாராட்டுதல் களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.(ந.நி.)

;