india

img

கொரோனாவை எதிர்கொள்வதில் மோடி அரசு தோல்வி.... காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு....

புதுதில்லி:
கொரோனா தொற்றுப் பரவலைக் கையாள்வதில் நாட்டின் நிர்வாக அமைப்பு முறை எதுவும் தோல்வி அடையவில்லை.  மோடி அரசுதான் தோற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.கொரோனா தொற்றுப் பரவல் குறித்து விவாதிக்க, மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சோனியா காந்திமேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றுப் பரவலால்லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டு அடிப்படை மருத்துவ வசதிகள்இன்றியும், உயிர் காக்கும் மருந்துகள்,ஆக்சிஜன், தடுப்பூசி கிடைக்காமலும்திண்டாடுகின்றனர். ஆயிரக்கணக் கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரைக் காக்க மக்கள் போராடுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளுடன் மருத்துவ உதவிக்காக மக்கள்நீண்ட தொலைவில் காத்திருக்கிறார் கள். ஆனால், மோடி அரசு என்ன செய்கிறது? அது, மக்களின் துன்பத்தையும், வலியையும் போக்காமல்,தங்களின் அடிப்படை பொறுப்புகள், கடமைகளை கைகழுவி விட்டது.

மக்கள் மீது எந்தவிதமான கருணையும் இல்லாத அரசியல் தலைமையின்கீழ் நாடு முடங்கிக் கிடக்கிறது. கொரோனா வைரஸ் சூழலைக் கையாள்வதில் நாட்டின் நிர்வாக அமைப்பு முறை எதுவும் தோல்வி அடையவில்லை. மோடி அரசுதான் இந்தியாவின் பலவிதமான வலிமைகளையும், வளங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படாமல் மக்களிடம் தோற்றுவிட்டது.கொரோனாவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான போர் அல்ல. கொரோனாவுக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் போர் இது என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. 

இந்தச் சிக்கலைக் கையாள திறமையான, அமைதியான, தொலைநோக்கு எண்ணம், பார்வை கொண்டதலைமை அவசியம். ஆனால், மோடிஅரசின் அலட்சியம் மற்றும் திறமையின்மை காரணமாக இந்த தேசம் மூழ்கி வருகிறது. கொரோனா  வைரஸுக்கு எதிரானபோரில் அனைத்துக் கட்சிகளும் கட்சிவேறுபாட்டை மறந்து, தேசத்துக்காக ஒன்றாக இணைந்து போராட வேண் டும். மக்களுக்குச் சேவை செய்ய இதுதான் சரியான நேரம்.கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் குறித்துப் பேச, மத்திய அரசு உடனடியாக நிலைக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா சூழலைச் சிறப்பாகக் கையாள நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக நிலைக்குழு அதிகாரியிடம் மனு அளித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுகாதாரத்துக்கான நிலைக்குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசைவலியுறுத்த வேண்டும். தாமதப்படுத் தும் சூழல் இல்லை.இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

;