india

மகாபஞ்சாயத்துகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு..... 1ம் பக்கத் தொடர்ச்சி...

கிளர்ச்சியை இழிவுபடுத்து வதற்கான அனைத்து நகர்வுகளும் பயனற்றவை என்று மத்திய அரசு கருதுகிறது. இதை ஒரு வன்முறை போராட்டமாக சித்தரிக்கும் நடவடிக்கையும் தகர்ந்தது.

மகாபஞ்சாயத்தில் பல்லாயிரக்கணக்கானோர்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு வட இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் பஞ்சாயத்துகள் கோருகின்றன. ஞாயிறன்று, ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சார்க்கி தாத்ரியில் பல்லாயிரக்கணக் கான மக்கள் அணிதிரண்டு மகாபஞ்சாயத்தில் இணைந்தனர். கிசான் மோர்ச்சா தலைவர்களான தர்ஷன் பால், ராகேஷ் திக்காயத், பல்பீர் சிங் ராஜேவால் ஆகியோர் மகா பஞ்சாயத்தில் உரையாற்றினர். ஏற்கனவே, ஹரியானாவில் ஜிந்த், உபியில் முசாபர்நகர், பாக்பத் மற்றும்ஷாம்லி ஆகிய இடங்களில்நடந்த மகாபஞ்சாயத்துகளில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்தனர். இது தவிர, ஹரியானா, உ.பி. மற்றும் ராஜஸ்தானிலும் சிறிய கிராம மையக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கார்ப்பரேட்டுகளுக்காக மோடி அரசுவிவசாயிகளை ஏமாற்றுகிறது என்ற உணர்வு கிராமங்களில் உள்ளது. உ.பி., பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பல பாஜகதலைவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். விவசாய பிரச்சனையை மோடி அரசு சரியாககையாளவில்லை என்ற கருத்து ஹரியானா உட்பட பல்வேறு இடங்களில் வலுவடைந்துள்ளது.

மற்றொரு விவசாயி தற்கொலை
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லிஎல்லையில் மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். ஹரியானாவில் உள்ள ஜிந்தைச் சேர்ந்தஐம்பத்திரண்டு வயது கரம்வீர் சிங், திக்ரி எல்லையில் உள்ள போராட்டக் களத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள  ஒரு மரத்தில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். ஞாயிறன்று காலைசடலம் கண்டெடுக்கப்பட் டது. அவரது சடலத்துடன் ஒருதற்கொலைக் குறிப்பும் கிடைத்தது. அதில்,மோடி அரசுதொடர்ந்து பேச்சுவார்த்தைக் கான தேதியை மாற்றி வருவதாகவும், சட்டங்கள் எப்போது திரும்பப் பெறப்படும்என்று சொல்ல முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. தில்லி எல்லையில் போராட்டம் தொடங்கிய பின்னர் நடந்துள்ள ஆறாவது தற்கொலையாகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு, திக்ரியில் ஒரு விவசாயி விஷம்குடித்து இறந்தார். இதுவரை, இந்த போராட்டங்களில் 150 க்கும் மேற்பட்டவிவசாயிகள் இறந்துள்ள னர்.

ஐநா மனித உரிமை அமைப்புக்கு ஒரு கடிதம்
கைதுகள் மற்றும் இணை யத்தை துண்டிப்பதன் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை அடக்குவதற்கான மோடி அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக விவசாய அமைப்புகள் ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தை (யுஎன்எச்ஆர்சி) அணுகியுள்ளன. மோடி அரசாங்கத்தின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இந்த அமைப்புகள் இந்தியாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளன.  மனித உரிமை சட்டங்களை பின்பற்றாத  கைதுகள் மற்றும் இணையத் துண்டிப்பு ஆகியவை முக்கிய பிரச்சனை களாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய அளவுகோல்களை டி.கே.பாசு வழக்கு கோடிட்டுக்காட்டுகிறது. இணையச் சேவை அடிப்படை மனித உரிமை என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. காவல்துறையினர் கடுமையான மனித உரிமை மீறல்களைமேற்கொண்டு வருவதாக வும், இந்த விவகாரத்தில் தலையிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக வழக்கறி ஞர் வாசு குக்ரேஜா கூறினார். இதுபோன்ற பல பிரச்சனை களில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு ள்ளதாகவும், அது இங்கேயும் நடக்கும் என்று நம்புவதாகவும் குக்ரேஜா கூறினார்.

;