india

img

கடல் சார் போக்குவரத்து உதவிகள் சட்டமுன்வடிவு அறிமுகம்... எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு....

புதுதில்லி:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19 திங்கள் கிழமையன்று  காலை தொடங்கியது. இக்கூட்டம் ஆகஸ்ட் 13 வரைநடைபெறும். முதல்நாளன்று பிரதமர் புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களை இரு அவைகளி லும் அறிமுகப்படுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்றின்இரண்டாவது அலையைக் கட்டப்படுத்துவதில் பாஜக அரசின்  தோல்வி, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் மேல் உயர்த்திஅதன்மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் உயர்த்தி, சாமானிய மக்களின் துன்பதுயரங்களை அதிகரித்திருப்பது, விவசாயிகளின் தொடர் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்று எண்ணற்ற பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அவையில் கொண்டு வந்தன. ஆனால் மோடி அரசோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இக்கூட்டத் தொடரில் 31 சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றிட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.  

ஜூலை 19 அன்று  மக்கள வையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறை வேற்றப்படாமலிருந்த 2011 கடல் சார்ந்த போக்குவரத்து உதவிகள் சட்டமுன்வடிவு (The Marine Aids to Navigation Bill, 2021) மாநிலங்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.இது நிறைவேறினால் கடல்போக்குவரத்தில் கப்பல்களின் சேவைகள் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம் நாட்டிலுள்ள 195 கலங்கரை விளக்கங்களும் சுற்றுலாத் தலங்களாக மாற்றியமைக்கப்படக்கூடும். மேலும் கலங்கரை விளக்கங்களின் டைரக்டர் ஜெனரல் பணியும், கப்பல் போக்குவரத்து சேவைகளின் டைரக்டர் ஜெனரல் என மாற்றியமைக்கப்படும். அவருடைய அதிகார வரம்பு அதிகரிக்கப்படும்.மாநிலங்களவையில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் நதிநீர்ப்போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால், எதிர்க்கட்சி உறுப்பினர் களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தினார்.

;