india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில  எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள்நடத்தி வரும் தொடர் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படத்தை பிரபல அமெரிக்க இதழான ‘டைம்’ அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.

                                              ******************

நாட்டில் திருநங்கைகள் ரத்த தானம் செய்ய தடை விதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகஉச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

                                              ******************

பல்வேறு வளா்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்குவதற்கு உலக வா்த்தக அமைப்பில் (டபிள்யூ.டி.ஓ) ஆப்பிரிக்க, கரீபியன், பசிபிக் நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

                                              ******************

நடப்பு ஆண்டுக்கான உலக டாப் 100 பல்கலைக்கழகங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலில் 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

                                              ******************

இந்திய ராணுவ வீரர்களின் சம்பளக் கணக்கைக் கையாளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடக் மஹிந்திரா வங்கி கையெழுத்திட்டுள்ளது.

                                              ******************

எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

                                              ******************

இந்திய ராணுவம் முதல் முறையாக சமூக வானொலி நிலையத்தை வடக்கு காஷ்மீரின் சோப்பூர் நகரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

                                              ******************

ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

                                              ******************

செக் மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதலான நீதிமன்றங்களை அமைக்க தனிச்சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

                                              ******************

ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தண்டனையை ரத்து செய்வது குறித்து வங்காளதேசத்தின் ஷேக் ஹசீனா அரசு பரிசீலனை செய்கிறது.

                                              ******************

இந்தியா உள்ளிட்ட நாடுகள் அளித்த முன்மொழிவின் அடிப்படையில் 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அறிவித்துள்ளது.

                                              ******************

உத்தரப் பிரதேசத்தில் பிலிபிட் மாவட்டத்தில் இந்தோ-நேபாள எல்லையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 

                                              ******************

ஜம்மு-காஷ்மீரில் முழு பொருளாதாரம் மற்றும் அரசியல் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு அமெரிக்கா வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளது.

                                              ******************

தில்லியில் உள்ள தலைமை தோ்தல் ஆணையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

                                              ******************

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு முரணாக மெரீனாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

                                              ******************

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளிட மிருந்து மாதிரிகள் எடுத்து  ஆய்வு நடத்திய இந்திய அறிவியல் நிறுவன விஞ்ஞானிகள், வைரஸ் இப்போது முன்பை விட வேகமாக உருமாறி வருவதாக தெரிவித்துள்ளனர்.

                                              ******************

நியூசிலாந்தில்,தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த  நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடலோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டது. 

                                              ******************

மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 50 லட்சம் மதிப்பிலான 952 கிலோ கடல் அட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

                                              ******************

ஈராக்கில் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

                                              ******************

சீனா தனது பட்ஜெட்டில் 209 பில்லியன் டாலர் நிதியை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது. உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் சீனா 2 ஆவது இடத்தில் உள்ளது. 

                                              ******************

பல்கலை., உதவிப் பதிவாளர் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைகழகத்தில் உதவிப் பதிவாளராக பணியாற்றி வந்தவர் அடைக்கலம் (59) இவர் ஆர்எம்டிசி நகரில் குடியிருந்து வருகிறார் இவரது மகளுக்கு புதனன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அடைக்கலம் வெள்ளியன்று காலை ரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார். திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;