india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி படம்!

5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடந்தை விதிகள் அமலுக்கு வந்துள் ளன. அவ்வாறிருக்கையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் தடுப்பூசிபோட்டுக் கொள்வோருக்கு வழங்கப் படும் சான்றிதழில் பாஜக-வைச் சேர்ந்தபிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக திரிணாமுல் கட்சி எம்.பி. டெரிக் ஓபிரைன் தெரிவித்துள்ளார்.

                                       ********************

ஆட்டநாயகன் விருதுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு!

மத்திய பாஜக அரசின் வரி அராஜகத் தால், பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 90 ரூபாயையும் தொட்டு நிற்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 864 ரூபாய் ஆகி விட்டது. மோடிஆட்சியில் விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்களாக இவை மாற்றப்பட்டுள் ளன. இந்நிலையில், ம.பி. மாநிலம் போபாலில் பிப்ரவரி 28 அன்று நடந்த உள்ளூர் கிரிக்கெட்டில், சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதுபெற்ற சலாவுதீன் அப்பாஸி என்ற வீரருக்கு பரிசாக 5 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. 

                                       ********************

மம்தாவிடமிருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ஓட்டம்!

மேற்குவங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரிணாமுல் காங் கிரசைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ,பாஜகவுக்கு தாவியுள்ளார். தற்போது கட்சி தாவியுள்ள ஜிதேந்திர திவாரி,2 முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப் பட்டவர். கடந்த மாதமே இவர் பாஜகவில் சேர்ந்து விட்டார். பின்னர் ஏனோதிரிணாமுலுக்கே திரும்பினார். தற் போது, கண்ணாமூச்சி விளையாட்டு ஆடிமீண்டும் பாஜகவுக்கு ஓடியுள்ளார்.

                                       ********************

வழக்குகளை சிம்லாவிற்கு மாற்றச் சொல்லும் கங்கனா!

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக- பாஜக ஆதரவு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலிமீது, மும்பையின் பல்வேறு பகுதிகளில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தன் மீதும், தனது சகோதரி மீதும்போடப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும், இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவிற்கு மாற்ற உத்தரவிடுமாறு கங்கனா ரணாவத் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இமாச்சலில் பாஜக ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.

                                       ********************

ரயில்வே பிளாட்பார்ம்  டிக்கெட் விலை ரூ. 50

மும்பை பெருநகர பிராந்தியத்தின் முக் கிய நிலைய பிளாட் பார்ம் டிக்கெட் விலையை மத்திய ரயில்வே 5 மடங்கு உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ. 10 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ. 50 ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா அபாயத்தைத்தவிர்க்கவே இந்த கட்டண உயர்வுஎன்றும், இது ஜூன் 15 வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

;