india

img

சில வரிச் செய்திகள்....

சிபிஐ, என்ஐஏ அலுவலகங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலை யங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

                                         **********************

புதிதாக பெறப்படும் வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தில் குறுகிய கால சலுகையாக பூஜ்யம் புள்ளி ஏழு (0.70) சதவீதம் வரை பாரத ஸ்டேட் வங்கிகுறைத்துள்ளது.

                                         **********************

மருத்துவ படிப்புகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்பட 9 பேர் மீது திமுக தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அவர்கள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                         **********************

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மடகாஸ்கர் தீவுக்கு ஆயிரம் டன் அரிசியும், மலேரியா மருந்துகளும் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

                                         **********************

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்ட ஒரேகிரிக்கெட் பிரபலம் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

                                         **********************

ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

                                         **********************

தமிழகத்தில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கத் தொடங்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

                                         **********************

பக்தர்களின் வசதிக்காக அலிபிரி மற்றும் திருமலையில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் அமைப்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

                                         **********************

கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் மரண தண்டனை விதிக்க பஞ்சாப் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

                                         **********************

விண்வெளியில் கட்டப்படும் ஓட்டலில் தங்கும் அறைகள், சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என ஏராளமான வசதிகளுடன், ஒரே நேரத்தில் 400 பேர் வரை தங்கும் வசதியுடன் கூடிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

                                         **********************

ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த ரித்விகா ஸ்ரீ என்ற 9 வயது சிறுமி, ஆப்பிரிக்க கண்டத்தின்மிக உயரமான கிளிமஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.

                                         **********************

மத்தியப்பிரதேச மாநில பாஜக எம்.பி., நந்த்குமார் சிங் சவுகான் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

                                         **********************

தில்லி மேற்குப் புறவழிச்சாலையில் மார்ச்  6 ஆம் தேதி, 6 நேரம் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் அறிவித்துள்ளார்.

;