india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 10 ஆயிரம் ரன்களை கடந்த 2 ஆவது வீராங்கனை என்ற பெருமையையும் மிதாலிராஜ் பெற்றுள்ளார்.

                                      *****************

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் வெள்ளியன்று நீர்மட்டம் 101.84 அடியாக குறைந்தது.

                                      *****************

கொளுத்தும் கோடைவெயில் காரணமாக வீராணம்ஏரி நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டதாலும் நீர்மட்டம் குறைந்துவிட்டதாலும் கோடை மழை பெய்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப ஏதுவாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

                                      *****************

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து கொடைக்கானல் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

                                      *****************

பஞ்சாப் மாநிலத்தில் 169 நாட்களாக நடைபெற்று வந்த ரயில்மறியல் போராட்டத்தை விவசாயிகள்வாபஸ் பெற்றதால், வெள்ளிக்கிழமை முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.

                                      *****************

பொறியியல் படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களை படித்திருக்க வேண்டும்என்ற கட்டாயம் இல்லை என அகிலஇந்திய தொழில்நுட்பக் கவுன்சில்(ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

                                      *****************

அமெரிக்காவில் உள்ள இந்தியக் கூட்டமைப்பு சார்பில் சா்வதேச பெண்கள் தினத்தையொட்டி பரதநாட்டிய கலைஞா் தேஜல் அமீன் உள்ளிட்ட 7 இந்திய பெண் சாதனையாளர்களுக்கு, தங்களது துறையில்சிறப்பான பங்களிப்பை நல்கியதற்காக விருதுகள் வழங்கப்பட்டன.

                                      *****************

விழுப்புரம்-மதுரை, எழும்பூர்-புதுச்சேரி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 17 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

                                      *****************

பஞ்சாப் மாநிலத்தின்மொஹாலி மற்றும் ஃபதேஹர் சாஹிப் ஆகிய பகுதிகளில் மார்ச் 12 முதல் இரவுநேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

;