india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

நாடாளுமன்றத்தில் மத்திய சமூக நீதி அமைச்சர் தாவர் சந்த் கெலாட் எழுத்துப்பூர்வ முறையில் அளித்துள்ள பதிலில், இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் வசித்து வருவதாகவும், இதில் ஆண்கள் 2,21,673, பெண்கள் 1,91,997 என்றும் கூறியுள்ளார். இவற்றில் மேற்கு வங்காளம் (81,224) முதல் இடத்தில் உள்ளது.

                                        ***************

வியாழனன்று தொடர்ந்து 12 ஆவது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.93.11-க்கும் டீசல் ரூ.86.45-க்கும் விற்பனைசெய்யப்பட்டது.

                                        ***************

இமாச்சலப்பிரதேசத்திலுள்ள சம்பா மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

                                        ***************

ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் காடிபுரா கிராமத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கர வாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும் அவர்கள் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும் காஷ்மீர் மாநில ஐ.ஜி. தெரிவித்துள்ளார். 

                                        ***************

தனுஷ்கோடி கடலில் அத்துமீறி நுழைந்த இலங்கை படகை இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மடக்கிப்பிடித்தது. அதில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

                                        ***************

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைக் கண்காணிக்க 118 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

                                        ***************

ஆதார் அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்ற  கோரிக்கையை ஏற்க  உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

;