india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் 32 ஆயிரத்து 033 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. 28,918 கொலை, 1.05 லட்சம் கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

                                   ***************

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்த காவல் ஆய்வாளர் மற்றும் 19 காவலர்கள் கூண்டோடு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

                                   ***************

3 நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ,அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கிய முக்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

                                   ***************

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமியின் மேற்பகுதியை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ள, ‘எஸ்.ஏ.ஆர்., ரேடார்” சாதனத்தை தயாரித்துள்ளது.

                                   ***************

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் விமான நிலையம் கட்டுவதற்கு 242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்புதலை விமானநிலைய ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது.

                                   ***************

சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

                                   ***************

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

                                   ***************

பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

                                   ***************

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பகுதியில் ஜாமர்கள் வைக்க வேண்டும் என்று தில்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தபால் வாக்குகள் VVPAT-ல் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை எண்ணவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள னர்.

;