india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

கட்டார் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

மனோகர் லால் கட் டார் தலைமையிலான ஹரியானா மாநில பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில் லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள் ளது. சம்யுக்த கிஷான்மோர்ச்சா கட்சி இதற்கான நோட்டீஸை சட்டப்பேரவைச் செயலரிடம் கொடுத்துள்ளது. 

                                          ***************

மதச்சார்பின்மையே நாட்டிற்கு அச்சுறுத்தல்!

“இந்துக் கலாச்சாரம் குறித்து பலரும்கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்துமதத்தில் இருந்துதான்புத்த மதம் உருவானதுஎன்று அங்கோவார்ட் கோவிலில் இருக்கும் புத்தமத வழிகாட்டி சொல்கிறார். தற்போதைய சூழலில் மதச்சார்பின்மை பேசுவதுதான் இந்தியாவுக்கு மிகப் பெரியஅச்சுறுத்தல் ஆகும். ராமாயணமும் மகாபாரதமும் நமக்கு வாழ்வியல் பாடங்களை மட்டுமே கற்றுத்தரவில்லை. இந்தியாவின் பரந்து விரிந்த எல்லைகளை பற்றியும் விவரிக்கின்றன” என்று உ.பி. பாஜகமுதல்வர் ஆதித்யநாத் பேசியுள்ளார்.

                                          ***************

பாஜகவினர் தவறான செய்தி பரப்புகின்றனர்!

“ஒரு சில நாட்களுக்கு முன்பு, ஜார்க் கண்ட் முதல்வர் என கூறிக்கொண்டு ஒருவர் தொலைபேசியில் என் னிடம் பேசினார். அவர், கொல்கத்தா நகரில் மம்தா பானர்ஜிக்காக வேலை செய்து விட்டு ரூ. 50 லட்சம்வாங்கிக் கொள்ளுங்கள் என கூறினார்.இதுபற்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாஎம்.பி.யை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு அவர், முன்னாள் பிரதமரான தேவகவுடாஜிக்கும் இதேபோன்ற தொலைபேசி அழைப்பு வந்தது என கூறினார். பாஜக பொய்களை பரப்பி வருவதே இதில் தெரிகிறது” என்று காஷ்மீர்முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

                                          ***************

‘ஆண்கள் தினமும்’  கொண்டாட வேண்டும்!

சர்வதேச மகளிர்தினம், திங்களன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டது. இந்தியாவிலும் அரசியல் கட்சித்தலைவர்கள், பலதுறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். தெலுங்கானா அரசு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவித்து மகளிர் தினத்தை கொண்டாடியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய மாநிலங்களவை பாஜக பெண் எம்.பி. சோனல் மன்சிங்,“சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

                                          ***************

அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள்...

“இளைஞர்கள் அரசை விமர்சித் தாலோ, சமூக ஊடகங் களில் விமர்சனம் செய் தாலோ சிறைக்குப் போவீர்கள், வேலை கிடைக்காது” என்று ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் மிரட்டியிருந்தார். இந்நிலையில், “மாவட்ட ஆட்சியர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நமது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், அவர்கள் தலையில் மூங்கில் பிரம்பால் அடியுங்கள்” என்றுமத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்கிஷோர் வன்முறையைத் தூண்டியுள்ளார்.

;