india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின்  நான்காம் வகுப்பு மாணவி வர்ஷிஹா (வயது 9) 2 மணி நேரத்தில் 23 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

                                                               *************************

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அமையவுள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள கணினி, இணைய வசதிகள் குறித்துத் தேர்தல் ஆணையம், பள்ளிக் கல்வித் துறையிடம் தகவல் கோரியுள்ளது.

                                                               *************************

அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

                                                               *************************

கொரோனா பேரிடா் காலத்தில் வேலை இழப்பு ஏற்பட்டதையடுத்து இந்திய குடும்பங்கள் தங்களது வருவாயில் ரூ.13 லட்சம் கோடியை இழந்துள்ளன என்று யுபிஎஸ் செகயூரிட்டிஸ் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

                                                               *************************

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலில் பொருத்தமற்ற ஆபாச காட்சிகளை அவ்வப்போது ஒளிபரப்பும் டிஜிட்டல் வலைதளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

                                                               *************************

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவை, முன்னுரிமை தரிசனம் தொடங்கப்படும் என்று தலைமை செயல் அலுவலர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

                                                               *************************

விரைவில் பாஸ்டேக் அட்டை மூலம், பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி ஆகியவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

                                                               *************************

வெள்ளியன்று இரவு பூமியை சிறிய குறுங்கோள் ஒன்று கடந்து சென்றுள்ளது. எகிப்து கடவுளான காட் ஆப் கேயாஸ் எனப்படும் அபோபீஸ் என பெயரிடப்பட்ட இந்த குறுங்கோள் சுமார் 340 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்ததாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

                                                               *************************

அங்கீகாரம் பெறாத செயலிகள் மற்றும் மின்னணு கடன் வழங்கும் தளங்கள் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்களிடம் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

                                                               *************************

சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள நீர்நிலைகளில் ஒன்றான ஆலப்பாக்கம் ஏரி பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி முழுமையாக தூர்வாரப்படவுள்ளது. அதன் பிறகே மற்ற மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

;