india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

அனுமனின் சஞ்சீவினியே கோவாக்சின் தடுப்பூசி...

கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, அனுமனின் சஞ்சீவினியை போன்றது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள் ளார். அன்று அந்த சஞ்சீவினியை அனுமன் இந்தியாவிற்கு வெளியே சென்று நமக்கு கொண்டு வந்தார். இந்த சஞ்சீவினி நம் வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கிறது என்றும் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டுள்ளார். முறையான பரிசோதனைகள் செய்யப்படாத ராம்தேவின் ‘கொரோனில் கிட்’ என்ற ஆயுர்வேதக் கலவையையும், ஹர்ஷ் வர்த்தன் அண்மையில் கொரோனாவுக்கு பரிந்துரைத்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

                                            ***********************

கங்கனா ரணாவத்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

நடிகர் சுஷாந்த் சிங்தற்கொலையை தொடர்ந்து ஹிந்தி திரையுலகைச் சாடிய நடிகை கங்கனா ரணாவத், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மீதும் குற்றச்சாட்டு தெரிவித்தார். ஹிருத்திக் ரோசனுடனான காதல் பிரச்சனையில் அமைதியாக இருக்கும்படி அக்தர் தன்னை மிரட்டியதாகக் கூறியிருந்தார். இதனை மறுத்த ஜாவேத் அக்தர், மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந் தார். ஆனால், இந்த வழக்கில் கங்கனா ஆஜர்ஆகாததால், அவருக்கு நீதிமன்றம் தற் போது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

                                            ***********************

அம்ரீந்தர் சிங்கிற்கும் ஆலோசகரான கிஷோர்

குஜராத்தில் மோடி, பீகாரில் நிதிஷ் குமார், தில்லியில் கெஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், தற்போது பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தனியாக வாகனம், அலுவலகம், ஊழியர்கள், பயணப்படி,கவுரவ மாத சம்பளமாக 1 ரூபாய் வழங்கப் பட உள்ளது. பஞ்சாப் மாநிலத்திற்கு 2022 பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

                                            ***********************

தேஜஸ்வியுடன் இனி எந்தப் பேச்சுமில்லை..!

‘‘மேற்குவங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது. சித்திக்கின் கட்சியையும் எங்கள் அணியில் சேர்க்கநடவடிக்கை எடுத்து வருகிறோம். முன்னதாக ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வியும், எங்கள் அணியில் இணைய ஆர்வம் காட்டினார். நாங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆனால் திடீரென அவர்மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார். இனிமேல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. தேஜஸ்வியுடன் இனி எங்களுக்கு எந்த பேச்சுமில்லை’’ என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

                                            ***********************

பாஜகவில் இணைந்த முன்னாள் நீதிபதிகள்!

கேரள உயர் நீதிமன்றத் தில் 2007 முதல் 2018 வரை பணியாற்றியவர் பி.என். ரவீந்திரன். அதேபோல 2011 முதல் 2019 வரை பணியாற்றியவர் வி. சிதம்பரேஷ். இவர்கள் இருவரும் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். முன்னாள் டிஜிபி வேணுகோபால் நாயர், அட்மிரல் பிஆர் மேனன்மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவன முன்னாள் பொது மேலாளர் சோமாச்சுதன் ஆகியோரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

;