india

img

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்.... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தல்......

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர், கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையாக உள்ளது. எங்கெங்கு தடுப்பூசி கிடைக்கிறதோ அங்கிருந்து தடுப்பூசிகளை வாங்குங்கள் என்று உலக சுகாதார அமைப்புஇந்தியாவிடம் வலியுறுத்தி யுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனம் (கோவிஷீல்டு) மற்றும் பாரத் பயோடெக் (கோவாக்சின்) ஆகிய இரண்டு நிறுவனங் கள் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. இந்த தடுப்பூசிகளின் தயாரிப்பு முறைகளை வேறு நிறுவனங்களுக்கும் வழங்கி அந்ததடுப்பூசிகளை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.ஆனால் மோடி அரசு இதனை கண்டுகொள்ளவில்லை என்று அரசியல் கட்சியினர் சாடுகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சருமான  நிதின் கட்காரிதெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தடுப்பூசியின் தேவை சப்ளையைவிட அதிகரித்தால், நிச்சயம் பிரச்சனை யை உருவாக்கும். ஒரு நிறுவனம்மட்டுமே தடுப்பூசி தயாரிக் கிறது. இதற்கு பதிலாக பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங் களுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் உரிமையை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் 2 அல்லது 3 மருந்து ஆய்வுக்கூட ங்கள், மருந்து நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவர்களி டம் தடுப்பூசிக்கான ஃபார்முலா வை வழங்கி தயாரிப்பை விரைவுபடுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான ராயல்டி தொகையை வழங்கிவிடலாம். நாட்டில் தடுப்பூசியை அதிகமாக சப்ளை செய்யவேண்டும். சப்ளை உபரியாக மாறிவிட் டால், அதன்பின் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யலாம். இதை 15 முதல் 20 நாட்களுக்குள் செய்துவிட முடியும்” என்று  தெரி வித்தார்.

;