india

img

உயிர்காக்கும் மருந்துகள்... கார்ப்பரேட் கொள்ளைக்கு துணைபோகும் மோடி அரசு.....

புதுதில்லி;
தடுப்பூசி விற்பனையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் கொள்ளைஅடிப்பதற்கு மோடி அரசு வழிகாட்டியுள்ளது

நாட்டில் முக்கிய மருத்துவர்களுடனும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டதற்கு பிறகு தடுப்பூசி உற்பத்தி குறித்த புதியஅறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகளில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச்சந்தை விற்பனைக்கும் அளிக்கவும்மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.மேலும், ரெம்டெசிவிர் உள்ளிட்டமருந்துகளின் விலை குறைக்கப்பட்டிருந்தாலும், நிறுவனங்கள் அவற்றை முன் தேதியிட்ட விலையில் விற்றுக்கொள்ளலாம் என்றும் அனுமதித்துள்ளது.இதை வரவேற்றுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘‘புதிய கொள்கையின்படி தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியில் குறிப்பிட்ட பகுதியை திறந்த சந்தையில் முன்பே அறிவிக்கப்பட்ட விலையில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. லாபம் என்பது கெட்ட சொல் அல்ல.
இது அதிக உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஊக்கமாக அமையும்’’எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்த நிலையில் பல்வேறுகார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் (100மி.கி.) மருந்தின் விலையை குறைத்துக் கொள்வதாக ஏப்ரல் 17 ஆம் தேதி அறிவித்தன. கெடிலா ஹெல்த்கேர் லிமிடெட் (REMDAC) ரூ.899 (2800)சைன்ஜின்  இன்ஸ்ரூமெண்டல் லிமிடெட் (RemWin) ரூ.2450 (3950)டாக்டர் ரெட்டிஸ் லேபரெட்டீஸ் லிமிடெட் (REDYX) ரூ.2700(5400)சிப்லா  லிமிடெட் (CIPREMI) 3000(4000)மைலான் பார்மஜூட்டிகல்ஸ் லிமிடெட் (DESREM) ரூ.3400 (4800)ஜுப்ளியன்ட் ஜென்ரிக்ஸ் லிமிடெட் (JUBI-R) ரூ.3400 (4700)ஹெட்ரோ ஹெல்த் கேர் லிமிடெட் (COVIFOR) ரூ.3490 (5400)அடைப்புக்குறிக்குள் உள்ளவை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைத்துக்கொள்வதாகக் கூறியுள்ள விலை. தற்போது மோடியின் அறிவிப்பால் அடைப்புக்குறிக்குள் உள்ள பழைய விலைக்கே இந்த நிறுவனங்கள் விற்கும் ஆபத்து உள்ளது. மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசுஎன்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறது.

;