india

img

வேளாண் சட்டம் அமலாக்கத்தை மாநிலங்களின் விருப்பத்திற்கு விடுங்கள்... மோடிக்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி ஆலோசனை...

புதுதில்லி:
மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்துக் கொண்டேபோகும் நிலையில், அவற்றை அமல்படுத்துவதை மாநிலங்களின் விருப்பத்திற்கு விட்டுவிடுமாறு பிரதமர் மோடியை, பாஜக மூத்தத்தலைவரும் அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சுப்பிரமணியசாமி மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

வேளாண் துறையில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு வந்தபோது, அதற்கு ஆதரவாகவே வாக்களித்தேன்.ஆனால், தற்போது போராட்டங்கள் நடைபெறும் நிலையில், இந்த வேளாண் சட்டங்களுக்காக 3 முக்கிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன்.முதல் விதி என்னவென்றால், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்த மாநிலங்களி்ல் இந்தச் சட்டத்தை அமல்படுத்தலாம். மாறாக, இந்த சட்டங்களை நடைமுறைப் படுத்த விருப்பம் தெரிவிக்காத மாநிலங்களை, இந்தச் சட்டத்தின் மூலம் பயனடைவதிலிருந்து விலக்கு அளிக்கலாம். இரண்டாவது விதி என்பது, ஒவ்வொரு மாநிலமும், குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) வழங்க நிரந்தரமான தகுதி பெறும் என்று குறிப்பிட வேண்டும்.

மூன்றாவது விதி என்பது, வேளாண் வர்த்தகம் மட்டும் பிரதானமாக இருப்பவர்களிடம் மட்டுமே உணவு தானியங்களைவாங்க வேண்டும். பிற வர்த்தகம் செய்துகொண்டே வேளாண் வர்த்தகம் செய்பவர் கள், வர்த்தக நலன்கள் உடையவர்களிடம் தானியங்கள் வாங்குவதை மட்டுப்படுத்த வேண்டும்இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறி யுள்ளார்.

;