india

img

அம்ரீந்தருக்கான ஆலோசகர் பணியிலிருந்து கிஷோர் ராஜினாமா.... பொது வாழ்க்கையில் ஓய்வு தேவைப்படுவதாக கடிதம்....

புதுதில்லி:
தேர்தல் வியூக வகுப்பாளரும், ‘ஐ-பேக்’ நிறுவனத் தின் தலைவருமான பிரசாந்த்கிஷோர், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் முதன்மைஆலோசகராக நியமிக்கப் பட்டு இருந்தார்.இதனிடையே, அவர் திடீரென தனது ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

“பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடுவதிலிருந்து தற்போது தற்காலிகமாக ஓய்வு எடுப்பதற்கான எனதுமுடிவை கருத்தில் கொண்டு,உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அம்ரீந்தர் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.2022-ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அம்ரீந்தர் சிங்கிடமிருந்து பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2012-இல் குஜராத்தில் மோடி நான்காவது முறையாக முதல்வர் ஆனபோதும், 2014-இல் மோடியே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போதும் அவருக்கான தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்ஆவார். பின்னர், 2015-இல்பீகாரில் ஐக்கிய ஜனதாதளத் திற்கும், 2017-இல் பஞ்சாப் தேர்தலில் காங்கிரசுக்கும், 2019-இல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், 2020-இல் தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், 2021-இல்மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜிக்கும், தமிழ்நாட் டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கும் தேர் தல் வியூக வகுப்பாளராக கிஷோர் பணியாற்றினார். இந்த தேர்தல்கள் அனைத்திலும் அவர் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

;