india

img

காஷ்மீர் அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் தில்லியில் பிரதமர் மோடி ஆலோசனை...

புதுதில்லி:
காஷ்மீர் அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடிஜூன் 24 வியாழனன்று புதுதில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில்  ஆலோசனை நடத்தினார். 

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2019 ஆம்ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து, அந்தமாநிலத்தை  இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சிதைத்தது.இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் களும் கண்டித்தனர்.  இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர்தொடர்பான முக்கியமான அனைத்துக்கட்சி கூட்டம் புதுதில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஜூன் 24 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துகட்சியினர் கலந்து கொண்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

;