india

img

தில்லி சிங்கு எல்லையில்  பத்திரிகையாளர் கைது.... காவல்துறை அராஜகம்....

புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை சீர்குலைக்க மத்திய பாஜக அரசும் அதன் காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தில்லி சிங்கு எல்லையில் பத்திரிகையாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியைமுடித்துக்கொண்டு தங்களது போராட்டக் களத்திற்கு திரும்பிய விவசாயிகள், சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சிங்கு எல்லையில்கவச உடையணிந்த பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், மன்தீப் பூனியா என்ற பகுதிநேரபத்திரிகையாளரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அவர் சிங்கு எல்லையில், அரசு ஊழியரான காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தார் என்று கூறி கைது செய்துள்ளனர். ஊடகங்களில் விவசாயிகள் போராட்டம் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்ற வேலையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
 

;