india

img

தில்லியில் கடுங்குளிர் தொடரும் விவசாயிகள் போராட்டம்....

புதுதில்லி:
தில்லியில் அதிகாலை வேளையில் நிலவும் நடுங்க வைக்கும் குளிரால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஜனவரி 1 வெள்ளியன்று காலை தில்லியில் குறைந்தபட்ச வெப்ப நிலை1.1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. கடந்த15 ஆண்டுகளில்  பதிவான குறைந்தபட்ச வெப்ப நிலை இதுவாகும்.  

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி தில்லியில் மிகக்குறைந்தபட்சமாக 0.2 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. அதன்பின் தற்போது, 1.1. டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. கடந்த ஆண்டில் மிகக்குறைந்தபட்சமாக 2.4 டிகிரி குளிர் தில்லியல் நிலவியது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் போராட்டம்
இந்த கடுங்குளிரிலும் தில்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் 37 ஆவது நாளாகத் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. தில்லியின் எல்லைகளில் கூடுதலான சாலைகள் மறிக்கப்பட்டுள்ளன. டிக்ரி மற்றும் தன்ஸா எல்லைகளின் வழிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இதை குறிப்பிட்ட தில்லிகாவல்துறை அதன் பொதுமக்களுக்குமாற்றுச் சாலைகளுக்கான வழிகளில் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது.மத்திய அரசுடன் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போராடும் விவசாயசங்கங்களின் 41 தலைவர்கள் பங்கேற் கின்றனர்.

;