india

img

சட்டமன்றத்தை கலைப்பதுதான் நியாயமானது.... ஊழல் முறைகேடுகளை மறைக்கவே உத்தரகண்ட் முதல்வர் மாற்றம்..... ஹரீஷ் ராவத் குற்றச்சாட்டு

டேராடூன்:
உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வராக இருந்த திரிவேந்திர சிங்ராவத், செவ்வாயன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.கட்சியின் தேசியத் தலைமை உத்தரவிட்டதால், பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். 

அதைத்தொடர்ந்து தற்போது எம்.பி.யாக இருக்கும் தீரத் சிங்ராவத், பாஜக எம்எல்ஏ-க்களால்புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிவேந்திர சிங் ராவத்தின் ஊழல் முறைகேடுகளை மறைக்கவே பாஜக திடீரென முதல்வர் மாற்றத்தைஅரங்கேற்றியுள்ளதாக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.திரிவேந்திர சிங்கின் பதவி விலகல் மட்டும் போதுமானது அல்ல.சட்டப்பேரவையைக் கலைப்பதுதான் நியாயமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நான்கு மாதங்களுக்கு முன்பு நைனிடால் உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதையும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உத்தரகண்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதையும் ஹரீஷ் ராவத் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் என்ன செய்தாலும், பாஜக இதுவரை செய்த பாவங்களைக் கழுவ முடியாது. நிச்சயமாக 2022-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜககப்பல் கவிழ்ந்துவிடும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

;