india

img

பெகாசஸ் உளவு வேலை குறித்து விசாரணை நடத்துவது அவசியம்.... பாஜக கூட்டணியிலுள்ள நிதிஷ் குமாரும் சொல்கிறார்.....

பாட்னா:
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் வேவு பார்க்கப்பட்டதாக கூறப்படும்விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண் காணிப்பின் கீழ் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மோடி அரசு பிடிவாதமாக அதற்குமறுத்து வருகிறது. விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை என்று கூறிவருகிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்றும் ஒன்றிய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில், “பெகாசஸ் விவகாரத்தில்விசாரணை நடத்துவது அவசியம்” என்று பாஜக கூட்டணியில் இருக் கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும்வலியுறுத்தியுள்ளார். இதுதொடர் பாக செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘பெகாசஸ் விவகாரம்குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். நவீன தொழில்நுட்பத்தை தீயகாரியங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பது எல்லோருக்குமே தெரியும். நீண்ட நாட்களாக செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை கேள் விப்பட்டு வருகிறோம். மக்களும் இதுகுறித்து பேசி வருகின்றனர். எனவே,பெகாசஸ் மென்பொருள் மூலம்வேவு பார்க்க முயற்சி மேற்கொள் ளப்பட்டிருந்தால், அதுகுறித்து உரியநடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டாக வேண்டும். விவாதம் மட்டுமல்ல; விசாரணை நடத்த வேண் டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

;