india

img

காப்பீடு துறையில் 79 அந்நிய முதலீடு மசோதா அறிமுகம்....

புதுதில்லி:
காப்பீடு திருத்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழனன்று அறிமுகப்படுத்தியது. எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்த அறிவிப்பில், காப்பீடு துறையில் அந்நிய நிறுவனங்கள் முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.இதன்படி காப்பீடு துறையில் திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழனன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார்.மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், “பொதுமக்களின் வாழ்க்கையில் இந்த மசோதா பெரிய தாக்கத்தை ஏற் படுத்தக்கூடும். காப்பீடு மசோதாவில் செய்யப்படும் 3-வது திருத்தம் இதுவாகும். வாஜ்பாய் அரசில் காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 26 சதவீதம் அனுமதிக்கப்பட்டது, அதன்பின்2015-ம் ஆண்டு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டு தற்போது 74 சதவீதமாக உயர்த்தமுடிவு எடுத்துள்ளீர்கள். இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும். இந்த மசோதாவில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்” எனத்தெரிவித்தார்.

;