india

img

கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்.... ஒன்றிய அமைச்சர் தகவல்...

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும்  இதற்கான வாட்ஸ் ஆப் எண்ணையும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்மாண்டவியா அறிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிநடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்ப ட்டுள்ளது.இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பக்கத்தில் , கொரோனா தடுப்பூசி இடங்களை இப்போது வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம். http://wa.me/919013151515 மூலம் MyGovIndia கொரோனா ஹெல்ப் டெஸ்கிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவதன் மூலம் தங்களுக்குமுன்பதிவு செய்யலாம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

;