india

img

அதிக டோஸ் தடுப்பூசி செலுத்தி தொடரும் கேரளத்தின் சாதனை....

புதுதில்லி:
கோவிட் தடுப்பூசிகளை வீணாக்காமல் பயன்படுத்துவதில் கேரளம் தொடர்ந்து சிறந்து விளங்குகிறது. கேரளா ஒரு டோஸ் தடுப்பூசியைக்கூட வீணாக்காதது மட்டுமல்லாமல், தடுப்பூசி உற்பத்தியாளர் களால் வழங்கப்படும் கூடுதல் டோஸ்களையும் வீணடிக்காமல் திறனைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவதாகவும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவுடன் சேர்ந்து, தடுப்பூசி அளவு வீணாகாத மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்றாகும். கேரளாவில் தடுப்பூசி வீணாவது -6.3 சதவிகிதம். (மைனஸ் 6.3), மேற்குவங்கத்தில் வீணாவது -5.4 சதவிகிதம். இதன் மூலம் கேரளாவால் கூடுதலாக 1.1 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பெற முடிந்தது. இதுபோல், வங்காளம் கூடுதலாக 1.6 லட்சம் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.தடுப்பூசியை வீணடிப்பதில் ஜார்க்கண்ட் முன்னணியில் உள்ளது. ஜார்க்கண்டில் 33.9 சதவிகிதம் தடுப்பூசி அளவு வீணடிக்கப்பட்டது. சத்தீஸ்கரில் 15.7 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 7.3 சதவிகிதமும், பஞ்சாபில் 7 சதவிகிதமும் தடுப்பூசி மருந்துகள் வீணாகி உள்ளன.

;